குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர், நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை மற்றும் குழந்தைகள் சாப்பிடக் கூடிய தின்பண்டங்களில் கலப்படம் அதிகம் இருந்ததால் அதனை பறிமுதல் செய்து அழித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர், நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை மற்றும் குழந்தைகள் சாப்பிடக் கூடிய தின்பண்டங்களில் கலப்படம் அதிகம் இருந்ததால் அதனை பறிமுதல் செய்து அழித்தனர்.



நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு உதவி பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலையில் காலாவதி தேதியின்றி இருந்ததாலும் ரசாயன கலவைகள் கலந்திருந்ததாலும் அவற்றை பறிமுதல் செய்தனர். இதே போன்று, சுற்றுலா தலங்களில் குழந்தைகள் சாப்பிடக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்ட ஜெல்லி, குளிர்பானம், தண்ணீர் பாட்டில், போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



இவ்வாறு தின்பண்டங்கள் உண்பதால் நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு முப்பதாயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்‌. இனி வரும் காலங்களில் கடை வியாபாரிகள் இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...