மத்திய தொழிற்சங்கங்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்த மறியல் போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

கோவை: மத்திய தொழிற் சங்கங்கள் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு இந்திக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கோவை: மத்திய தொழிற் சங்கங்கள் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு இந்திக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;-

அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு, தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி, தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, தொழிலாளர்களை நிர்க்கதியாய் ஆக்கியதைக் கண்டித்தும், சம வேலைக்கு சம ஊதியம், பணிக்கொடை உச்சவரம்புகளை நீக்க வலியுறுத்தியும், சிறுகுறு நடுத்தர தொழில்களை அழிவில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தியும் நாளை (08.01.2020) ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த AITUC, CITU, INTUC, HMS, AICCTU உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்தில் மாநில சங்கங்களான LPF, MLF, SDTU வும் கலந்து கொள்கின்றன. தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற இந்தப் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

மேலும், இந்த போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முழுமையாக பங்கேற்பார்கள். கோவை மாவட்டத்தில் கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய நான்கு மையங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபடவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த மறியல் போராட்டங்களிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.

அதேபோல, தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை மதியம் 12.00 மணிமுதல் 12.10 மணிவரை 10 நிமிட நேரம் நிறுத்தி வைத்து ஆதரவு கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...