கோவையில் வரும் 10ம் தேதி முதல் பாரம்பரிய உணவுத் திருவிழா; மண் மணமிக்க உணவு வகைகளின் சங்கமம்..!

கோவை: கோவையில் மண் மணம் மிக்க உணவு வகைகளுடன் மூன்று நாட்கள் உணவு திருவிழா வரும் 10ம் துவங்கி 12ம் தேதி வரை கொடிசியா சாலையில் நடக்கிறது.


கோவை: கோவையில் மண் மணம் மிக்க உணவு வகைகளுடன் மூன்று நாட்கள் உணவு திருவிழா வரும் 10ம் துவங்கி 12ம் தேதி வரை கொடிசியா சாலையில் நடக்கிறது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் உணவு திருவிழா வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கொடிசியா சாலை மைதானத்தில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ரயில் நிலையம் எதிரில் உள்ள ஆர்.ஹெச்.ஆர் விடுதியில் நடைபெற்றது.



அப்போது, உணவு திருவிழா தொடர்பாக உணவுத் திருவிழா தலைவர் பாலசந்தர் கூறுகையில், அனைத்து வகையான உணவுகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் 140 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு திருவிழாவை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்க உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

இந்த உணவு திருவிழாவில் சிலம்பாட்டம், ஜமாப், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த உணவு திருவிழாவின் முதல் நாளில் இசைக் கலைஞர் ஸ்டீபன் தேவசு இசை நிகழ்ச்சியும், இரண்டாம் நாள் பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பங்கேற்பதாகவும், மூன்றாம் நாள் பாடகர் திவாகர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

கடந்த ஆண்டு விழாவில் 15,000 குழந்தைகள், 35,000 பெரியவர்கள் என ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டதாகவும் இந்த ஆண்டு எழுபதாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், உணவு திருவிழாவிற்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் உணவு திருவிழா டிக்கெட்டுகளை புக் மை ஷோ ஆன்லைன் மூலமாகவும் விழா நடக்கும் தேதிகளில் மதியம் ஒரு மணி முதல் இரவு பதினோரு மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கடந்த ஆண்டு ஐந்து கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாகவும் இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமையல் கலை கலைஞர் தாமு பங்கேற்று உணவு வகை தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்ட உள்ளதாக தெரிவித்த அவர், இந்த உணவு திருவிழாவில் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் 300 பேருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் பெரியவர்களுக்கு 120 ரூபாய் நுழைவு கட்டணமும் குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ஒரு நபர் 150 ரூபாய் விலையில் பெரும்பாலான உணவு வகைகளை ருசிக்க முடியும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது ஓட்டல் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் விவேக் சீனிவாசன், பொருளாளர் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...