நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தும் மலைகாய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதற்கு மலை தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் உதகை மார்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மலைகாய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் மீறுபவர்கள் மீது ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மலை காய்கறி விவசாயிகள், மலைத் தோட்ட காய்கறி விவசாயிகளுக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தக் கூடாது என்றும் பூச்சிகொல்லி மருந்துகள் இன்றி காய்கறிகளை சாகுபடி செய்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்றனர்.

மேலும், விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகமும், தமிழக தோட்டக்கலைத்துறையும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் இன்றி மலைகாய்கறிகளை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற தேவையான சோதனைகளை செய்த பிறகு, மலை மாவட்ட விவசாயிகளை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்ய அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி உதகையில் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

மார்கெட் கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.