கோவை அருகே பெட்ரோல் பங்கில் பெண் பணியாளர்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா; ஆதாரங்களை திரட்டிய கணவர் மீது நிர்வாக தரப்பினர் தாக்குதல்

கோவை: கோவை அடுத்த சாய்பாபா காவல் எல்லைக்குட்பட்ட எருக்கம்பெனி பகுதியில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக எழுந்த புகாரில், ஆதாரங்களை சேமித்து வைத்த பெண்ணின் கணவரை நிர்வாக தரப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அடுத்த சாய்பாபா காவல் எல்லைக்குட்பட்ட எருக்கம்பெனி பகுதியில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக எழுந்த புகாரில், ஆதாரங்களை சேமித்து வைத்த பெண்ணின் கணவரை நிர்வாக தரப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் கணவர் மணிகண்டன் சந்தேகத்துக்குரிய நபரான சூப்பர்வைசர் சுபாஸ் மீது நிர்வாகத் தரப்பில் புகார் தெரிவித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்பு சமரசம் செய்யப்பட்டது. அதேசமயம், ரகசியமாக உடைமாற்றும் அறையில் கேமராவை வைப்பதையும், ரெக்கார்ட் செய்த வீடியோக்களையும் சவிதாவின் கணவர் மணிகண்டன் ஆதாரமாக சேமித்து வைத்திருப்பது நிர்வாக தரப்புக்கு தெரியவந்தது.



இதையடுத்து இன்று மணிகண்டன் வைத்துள்ள ஆதார வீடியோக்களை அழிக்கும் படி நிர்வாகத் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மணிகண்டன் வீடியோவை அழிக்க மறுத்ததால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், சூப்பர்வைசர் ரகசியமாக வீடியோ எடுப்பதை மற்றும் வீடியோக்களை நான் ஒரு ஆதாரத்திற்காக சேமித்து வைத்திருந்தேன். ஆனால் இன்று என்னிடம் ஆதாரம் இருப்பதை அறிந்த நிர்வாக இயக்குனர் கவிதாசன், மக்கள் தொடர்பாளர் சரவணன், மேலாளர் சங்கர் கணேஷ் மற்றும் சிலர் கடுமையாக தாக்கினர். இதைத்தொடர்ந்து நான் பெட்ரோல் திருடியதாகவும் பொய்யான புகார் அளித்துள்ளனர் என தெரிவித்தார்.

இதுகுறித்து பெட்ரோல் பங்கின் உரிமையாளரான கவிதாசன் கூறும்போது;-

மணிகண்டன் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டதை எங்களது பணியாளர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் நான் மணிகண்டனை விசாரிக்க காவல்துறையிடம் ஒப்படைக்க சொல்லியிருந்தேன். இதில் அவர் திருட்டு வழக்கை திசை திருப்ப பழைய பிரச்சினையை கிளப்புகிறார்.

பெண்களின் உடை மாற்றும் வீடியோவை எடுத்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அவரை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் மூன்று மாதத்திற்கு முன்பே ஒப்படைத்தோம். ஆனால், மணிகண்டன் தரப்பினர் அவர்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர். தற்போது பெட்ரோல் திருட்டு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மணிகண்டன் வேண்டும் என்றே பிரச்சினையைத் திசை திருப்புகிறார் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...