கோவை: போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதை விட பங்கேற்பது முக்கியம் என அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.
கோவை: போட்டிகளில் வெற்றி பெறுவது என்பதை விட பங்கேற்பது முக்கியம் என அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தெரிவித்தார்.
அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டிகள் கோவை கேரளா கிளப்பில் இன்று துவங்கியது. கேரளா கிளப் அணி, ஊடகங்களில் பணியாற்றுவோர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதை விட அதில் பங்கேற்பது என்பது மிக முக்கியம் என்றார். தொடர்ந்து இது போன்ற போட்டிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் காவல்துறையினர் மற்றும் ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் அதிகப்படியான வேலை பளு உள்ள நிலையில், இது மாதிரியான விளையாட்டு போட்டிகள் அவர்களது மன அழுத்தத்தையும் குறைக்கும் என்றவர், இதனை ஒருங்கிணைத்த கிளப் நிர்வாகிகளுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இதனையடுத்து இப்போட்டிக்கான டி ஷர்ட்டை அறிமுகம் செய்த அவர், இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டார். வரும் 14ம் தேதி வரை இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இறுதி போட்டி 14ம் நடைபெற்று அன்றைய தினம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கேரள கிளப் தலைவர் ஸ்ரீ குமாரன், செயலாளர் சசிதரன், துனை தலைவர் பிரதீப் நம்பியார், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் குரியன் மற்றும் அல்ட்ரா குரூப் சேர்மன் சிவசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.