கோவை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெ.என்.யு. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் இதனை தடுக்க டெல்லி காவல் துறையினர் தவறி விட்டதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.