மேட்டுப்பாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க கைப்பற்றிய ஊராட்சிகள்; விருந்துடன் விமர்சையாக நடைபெற்ற பதவியேற்பு விழா..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஓடந்துறை மற்றும் பெள்ளேப்பாளையம் ஊராட்சியை மீண்டும் தி.மு.க கைப்பற்றியுள்ள நிலையில் ஊராட்சி தலைவர்கள் பதவியேற்பு விழா விருந்துடன் விமர்சையாக நடைபெற்றது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஓடந்துறை மற்றும் பெள்ளேப்பாளையம் ஊராட்சியை மீண்டும் தி.மு.க கைப்பற்றியுள்ள நிலையில் ஊராட்சி தலைவர்கள் பதவியேற்பு விழா விருந்துடன் விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட பெள்ளேப்பாளையம் மற்றும் ஓடந்துரை ஊராட்சிகள் காரமடை ஒன்றிய பகுதிகளாகும். இந்த பகுதி அ.தி.மு.க கோட்டையாகவும், அ.தி.மு.க அதிக வாக்குகள் பெறும் இடமாக இதுவரை இருந்து வந்த நிலையில், நடந்து முடிந்த ஊரக தேர்தலில் பெள்ளேப்பாளையம் ஊராட்சி மற்றும் ஓடந்துரை ஆகிய இரு ஊராட்சிகளையும் இருபது ஆண்டுகளுக்கு பின் தற்போது தி.மு.க மீண்டும் கைப்பற்றியுள்ளது.



1991ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஊராட்சி பகுதிகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க நேரடியாக போட்டியிட்டு இருந்தாலும் ஒரு முறை கூட தி.மு.க வெற்றிபெற முடியாத நிலையில் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த இரு ஊராட்சிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பெள்ளேப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக சிவக்குமாரும், ஓடந்துரை ஊராட்சி மன்ற தலைவராக தங்கவேலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றியை காணமுடியாமல் முயற்சி மேற்கொண்ட தி.முகவினருக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளதால் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிகளை விமர்சையாக நடத்தியதுடன் கட்சியினருக்கும் வாக்களித்தவர்களுக்கும் விருந்து வைத்து அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.டி கல்யாண சுந்தரம், சுரேந்திரன் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...