திருப்பூர்: 30 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது முன்னாள் அரசு ஊழியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
திருப்பூர்: 30 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் மீது முன்னாள் அரசு ஊழியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த பொங்கு பாளையத்தில் அரசு ஊழியர் நகர் என்று மனை இடங்களாக பிரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே நில தகராறு ஏற்பட்டதால் 1995ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், நிலத்தை வாங்கிய 70க்கும் மேற்பட்ட முன்னாள் அரசு ஊழியர்களுக்கு நிலம் சொந்தம் என நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகி உள்ளதாகவும் ஆனால், நிலத்தை தாங்கள் கிரையம் செய்துவிட்டதாக வேல், ஜெயக்குமார், முருகேசன், பாஜகவைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேர் தங்களை நிலத்தின் உள்ளே அனுமதிக்க மறுத்து விரட்டுவதாக தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற தீர்ப்பின்படி நிலத்தை உபயோகப்படுத்த தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட முன்னாள் அரசு ஊழியர்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.