கோவை: 108 அவசர ஊர்தி சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அளித்த மனுவில் தெரிவித்ததாவது;-
கோவை மாவட்ட தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவசர ஊர்தி சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும், பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குச் செல்லும் ஊழியர்களுக்கு பயணபடி மற்றும் உணவுபடி வழங்கிட வேண்டும், இந்த சேவையைச் செய்யும் தனியார் நிறுவனம் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக வேறு மாவட்டங்களுக்குப் பணி மாற்றம் செய்யப்படுவதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும், தற்போது இயங்கி வரும் பெரும்பாலான வாகனங்கள் பழுதடைந்து உள்ள நிலையில் உள்ளதால் இதனை மாற்றிட வேண்டும் எனவும் அவசர ஊர்தியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதால் தனியார் நிர்வாக சீர்கேட்டால் அவசர ஊர்தி சேவை குறைபாடு ஏற்படுவதாகவும் இந்த குளறுபடிகளை சரி செய்ய 108 அவசர ஊர்தி சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.