கோவை: ஏடிஎம்களில் பணம் எடுக்க உதவுவதாக பொது மக்களை ஏமாற்றி நூதன முறையில் பணம் பறித்து வந்த கொள்ளையனை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

சமீபகாலமாக ஏடிஎம் மையங்களை குறிவைத்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது, ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி பணத்தை கொள்ளை அடிப்பது, பணத்தை ஏடிஎம் அருகே எண்ணிக் கொண்டு இருக்கும் பொது மக்களிடமிருந்து பறித்துச் செல்வது என பல வகைகளில் பொதுமக்களின் பணம் பறிபோய் வருகிறது.
இதனால் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளிலும் விழிப்புணர்வுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏடிஎம்களில் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து ஏடிஎம் கார்டை லாவகமாக திருடி சென்று வேறொரு ஏடிஎம்மில் பணத்தை முழுவதும் எடுத்துச் செல்லும் நூதன கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக முதியோர்களை குறிவைத்து இந்த நூதன பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பணம் பறிப்பு சம்பவம் தொடர்பாக கோவை மாநகரில் குனியமுத்தூர் காவல் எல்லை, போத்தனூர் காவல் எல்லை சாய்பாபா காலனி காவல் எல்லை போன்ற காவல் நிலையங்களில் தொடர்ச்சியாகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து நூதன கொள்ளையனை சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் கண்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் நேற்று போத்தனூர் ஏடிஎம் அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட சென்ற நூதன கொள்ளையனை கையும் களவுமாக பிடித்தனர். அவனிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (48) என்பதும், இவர் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஏடிஎம் மையங்களை குறிவைத்து இலட்சக்கணக்கான பணங்களை கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, போலீசார் கைது செய்யப்பட்ட கதிரேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றி வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்த சம்பவம் புகார்தாரர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.