வால்பாறை அருகே முள்வேலியில் சிக்கிய கரடி பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துக்குள் விடப்பட்டது

கோவை: வால்பாறை அருகே உள்ள காபி தோட்டத்தின் முள்வேலியில் சிக்கிய கரடியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் கரடியை வனத்துக்குள் விரட்டினர்.


கோவை: வால்பாறை அருகே உள்ள காபி தோட்டத்தின் முள்வேலியில் சிக்கிய கரடியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் கரடியை வனத்துக்குள் விரட்டினர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி.புலி, சிறுத்தை, யானை உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த பழைய வால்பாறையில் உள்ள காபி தோட்டத்தில் உள்ள முள் வேலியில் கரடி ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதாக வனத்துறைக்கு நிர்வாகம் மூலம் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து 10க்கும் வனத்துறையினர் காபி தோட்ட காவலர்கள் விரைந்து வந்து கரடியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உறுமி கொண்டிருந்த கரடியை தீ பந்தங்களைக் காட்டி அமைதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து, மரங்களைக் கொண்டு பாதுகாப்பு வேலி அமைத்து விட்டு கரடி சிக்கியுள்ள முள் வேலி துண்டிக்கப்பட்டது.

பின்னர், முள் வேலியில் சிக்கிய கரடி விடுபட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. கரடி பத்திரமாக மீட்கப்பட்டதற்கு வன உயிரின ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...