கோவை: வால்பாறையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் செபீர் தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட தலைவர் கபூர் தலைமை உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி வால்பாறை சட்டமன்ற தொகுதி செயலாளர் வீரமணி, தி.மு.க தொழிற்சங்கம் எல்பி.எப். தலைவர் சௌந்தரபாண்டியன், தி.மு.க நகர செயலாளர் பால்பாண்டி, நகர காங்கிரஸ் தலைவர் குசலவன், அ.ம.மு.க நகர செயலாளர் நெல்லை செல்வம், குஞ்சாலி, ஐ.என்.டி.யூ.சி.கருப்பையா, இ.கம்.மோகன், சி.ஐ.டி.யூ பரமசிவம், மனித நேய மக்கள் கட்சி செய்தலிவி ஏராளமான கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியபடி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர். வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.