வைகுண்ட ஏகாதேசி விழா; 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு - திரளான பக்தர்கள் தரிசனம்

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ரெங்கநாதரை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ரெங்கநாதரை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். கொங்கு மண்டலத்தின் மிகவும் பிரசித்திபெற்ற வைணவ ஸ்தலமான காரமடை அரங்கநாதர் கோவிலில் பெருமாள் சுயம்பு வடிவமாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி திருமொழி திருநாள் என்ற பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. இதனையடுத்து அரங்கநாத பெருமாளை போற்றி தினமும் 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரதிவ்யபிரபந்த பாசுரங்களை நல்லான் சக்ரவர்த்தி சுவாமிகள், சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன்னிலையில் பாடிவந்தனர்.

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கும் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் கோவில் உள்பிரகாரம் வழியே வலம் வந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார்.

பின்னர் வேதவிற்பனர்கள் மந்திரங்கள் முழங்க காலை 5.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டு அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அதன் வழியே வெளியே வந்து சொர்க்கவாசல் வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனு ஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். பின்னர் பெருமாள் கோவில் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த அலங்கார பந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷமிட்டு அரங்கநாதரை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...