கோவை சூலூர் அருகே சிறார் ஆபாசப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது

கோவை: கோவையில் சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து, பதிவிட்ட சூலூரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவையில் சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து, பதிவிட்ட சூலூரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் சைபர் பிரிவின் சமூக ஊடகப் பிரிவில் சமூக வலைதளங்களை கண்காணித்தபோது ஒரு நபர் சிக்கியுள்ளார். அவரது கணக்கை போலீஸார் ஆராய்ந்தபோது சத்தியமூர்த்தி( 25) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. 

மேற்படி நபர்‌ சூலூரிலிருந்து ஆபாச படங்களை பதிவேற்றம்‌ செய்தது கண்டுபிடிக்கப்பட்டு சமூக

ஊடகப்பிரிவில்‌ இருந்து சூலூர்‌ காவல்நிலையத்தில்‌ எழுத்து மூலமான புகார்‌ அளிக்கப்பட்டது. பின்னர் புகாரின் பேரில்‌ சூலூர்‌ காவல்நிலைய குற்ற எண்‌: 09/2020, ச/பி. 13,14(1),15 of POCSO ACT 2012 r/w IT Act, -ல்‌ வழக்குப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் அவர் சூலூரில்‌

உள்ள தனியார்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவனிடமிருந்த கைப்பேசியை ஆய்வு செய்த போது, அந்த கைப்பேசியில்‌ சிறார்களின்‌ ஆபாச படங்கள்‌ உட்பட பல ஆபாச படங்கள்‌ இருந்ததை உறுதிப்படுத்தினர். விசாரணையில் தனது அப்பா பெயர்‌ ராமசாமி என்றும்‌ தான்‌ கடந்த இரண்டு வருடங்களாக பொறியியல்‌ கல்லூரியில்‌ ஒட்டுநராக பணிபுரிந்து வருவதாகவும்‌ தான்‌ அவினாசியில்‌ உள்ள போதம் பாளையத்தில்‌ வசித்து வருவதாகவும்‌ கூறினார்‌. 

மேலும், தனக்கு ஆபாச படம்‌ பார்க்கும்‌ பழக்கம்‌ இருந்ததாகவும்‌ தான்‌ பார்க்கும்‌ படங்களை மற்றவர்களும்‌ பார்க்க தனது முகநூலில்‌ குழந்தைகளின்‌ ஆபாச படத்தை பதிவேற்றம்‌ செய்ததை

ஒப்புக்கொண்டார்‌. மேலும், பதிவேற்றம்‌ செய்த ஆபாசப்படத்தை தனது

கைப்பேசியில்‌ வைத்திருந்தார்‌. பின்னர் கைப்பேசியைக் கைப்பற்றி அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்வாறான குழந்தைகள்‌ தொடர்பான ஆபாச புகைப்படம்‌ மற்றும்‌ வீடியோக்களை வைத்திருப்போர்‌ மற்றும்‌ சமூக வலைத்தளங்களில்‌ பதிவிடுவோர்கள்‌ பற்றிய விவரங்கள்‌ சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில்‌ மேற்படி நபர்களும்‌ சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்‌ என கோவை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமார்‌ எச்சரித்‌துள்ளார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...