உதகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி; உடனடியாக நடவடிக்கை எடுக்க கோ‌ரி‌க்கை

நீலகிரி: உதகை நகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி: உதகை நகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.

நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலான சாலைகளாக உள்ள நிலையில், வாகன போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வரும் சூழலில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உதகை நகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்து வருவது மட்டுமின்றி சாலைகளின் நடுவே நின்று கொண்டும், படுத்து கொண்டும் இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



மேலும், நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தாலும், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவது தொடர் கதையாகவே உள்ளது.

இந்நிலையில், உதகை நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்படுவதோடு விபத்துகளும் நேரிடுவதால் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து காவலர்கள், விலங்கின ஆர்வலர்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...