முறையற்ற செயலை முறையாக செய்திருப்பதன் மூலமே அதிமுக கூட்டணிக்கு கோவை உள்ளாட்சி தேர்தலில் இந்த வெற்றி - திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சனம்

திருப்பூர்: முறையற்ற செயலை முறையாக செய்து இருப்பதன் மூலமே அதிமுக கூட்டணி தமிழகத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.


திருப்பூர்: முறையற்ற செயலை முறையாக செய்து இருப்பதன் மூலமே அதிமுக கூட்டணி தமிழகத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார். 

திருப்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அதன் காரணமாகவே பணிகளை துவங்குவதற்கான விழாக்களில் என்னை அழைப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கு தனி ஆணையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறையற்ற செயலை முறையாக தேர்தல் ஆணையம் செய்ததன் காரணமாகவே அதிமுக கூட்டணி இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் இல்லாவிட்டால் படுதோல்வியை சந்தித்து இருக்கும் எனவும் குறிப்பிட்டார். திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு மூன்றாவது இடம் பிடித்தவரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததன் மூலமாகவே அதன் முறையற்ற செயல் தெரிய வருகிறது எனவே இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளிக்க இருப்பதாக கூறினார். 

குடியுரிமை திருத்த சட்ட மசோதா அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன, அதற்கு அந்தந்த மாநிலங்களுக்கு உரிமை உண்டு எனவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாளும் பின்வாங்க மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ள நிலையில் மக்களின் போராட்டங்களே அவர்களுக்கு உணர்த்தும் என்று அவர் தெரிவித்தார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...