கோவை: இந்திய மக்களின் மீது மோடி அரசின் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறி, ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் போர்க்குரல். காவல்துறை அனுமதி மறுத்தால் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் உள்ளிட்டோர் கைது.
கோவை: இந்திய மக்களின் மீது மோடி அரசின் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறி, ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் போர்க்குரல். காவல்துறை அனுமதி மறுத்தால் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் உள்ளிட்டோர் கைது.
தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவும் அதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மக்களின் பொருளாதார வாழ்வு உரிமைகள் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் தாக்குதல்களை கண்டித்து, இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்தும் ஜனவரி 8 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்ட ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவையில் சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி்ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசு மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இப்போராட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் சி. பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், சிவசாமி, தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.