நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராயினர். கோவை மத்திய சிறையிலுள்ள வாளையார் மனோஜின் தந்தை இறந்ததையடுத்து 4 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரைத் தவிர அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வாளையார் மனோஜின் தந்தை இறந்ததை அடுத்து ஜாமீன் வழங்க நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி வடமலை வாளையார் மனோஜுக்கு வருகிற 7ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரும் வரும் ஜனவரி 28ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.