கோவை: கோவை விமான நிலையத்தில் சிங்கபூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்பிளான வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்கவரி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் இன்று, சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஸ்கார்ட் ஏர் லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கேரளா திருசூரை சேர்ந்த அபீஸ் என்ற வாலிபரை பிடித்து சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் கொண்டு வந்த பையில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட ரூ10.65 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதேபோல், திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரீதின் ஏண்டோ என்ற வாலிபரிடம் சோதனையிட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.10.80 லட்சம் மதிப்பிளான சிகரெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரிடமிருந்தும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.