நீலகிரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக ஆட்சியரிடம் வேட்பாளர்கள் மனு

நீலகிரி: உதகையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொட்டபெட்டா ஊராட்சியில் குளறுபடி நடந்துள்ளதாகவும் அப்பகுதியில் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

நீலகிரி: உதகையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொட்டபெட்டா ஊராட்சியில் குளறுபடி நடந்துள்ளதாகவும் அப்பகுதியில் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. உதகை ஊராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து முடிந்தது. இதில், உதகை தொட்டபெட்டா ஊராட்சி பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் எண்ணப்பட்ட வாக்குகளில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக அரசினர் விருந்தினர் மாளிகை அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு முற்றுகையிட்டனர்.



மேலும், தொட்டபெட்டா ஊராட்சியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிகமாக குளறுபடி நடந்துள்ளதாகவும் முறையாக வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமென தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து விசாரித்த பின்பு அதற்கான முடிவு எடுக்கப்படும் என கூறியதையடுத்து மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...