கோவை: வால்பாறையில் சாலையில் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2ம் தேதி காலை வாழைத்தோட்டம் பகுதியில் நடந்து சென்ற பெரிய கல்லாறு பகுதியைச்சேர்ந்த கண்ணன் மகன் தரணி(6) மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தான்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.