ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியையொட்டி நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கோவை: கோவை தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கோவை திமுக வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கோவை திமுக வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மசக்காளிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை ஆராவாரத்துடன் கொண்டாடினர்.

இதன் பின்னர் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறுகையில்:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமல், கிராம ஊராட்சி ஒன்றியக் குழு நடத்தும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமே இன்றைக்கு முதல் கட்டமாக தேர்தலை நடத்தியுள்ளதாகவும், பல்வேறு அத்துமீறல்களை கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய குழுக்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் அதேபோல ஊராட்சி மன்றங்களில், தமிழகம் முழுவதும் மகத்தான வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

மக்கள் பல்வேறு அரசின் அத்துமீறல்களுக்கு இடையிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியைத் தந்திருப்பதாக கூறிய அவர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் துவங்கியது முதல் திமுக வெற்றி பெற்ற இடங்களை அறிவிக்காமல் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தான் அறிவித்தனர் என குற்றம் சாட்டினார். 

அதிகார துஷ்பிரயோகம் தாண்டி திமுக முன்னிலை பெற்று உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களும் திமுக சார்பில் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...