கோடநாடு குற்றவாளி வாளையார் மனோஜின் தந்தை மரணம்; இடைக்கால ஜாமின் வழங்கியது உதகை நீதிமன்றம்

நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி வாளையார் மனோஜின் தந்தை இறந்ததால் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான குற்றவாளி வாளையார் மனோஜின் தந்தை இறந்ததால் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.



சயான் மற்றும் வாளையார் மனோஜ் இருவரை தவிர அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாளையார் மனோஜின் தந்தை செரு கோரன் (67) திருச்சூரில் மரணமடைந்தார். வாளையார் மனோஜ் அவருக்கு ஒரே மகன் என்பதால் ஈமச்சடங்கு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து வழக்குரைஞர் சிவக்குமார் வாளையார் மனோஜ்க்கு இடைக்கால ஜாமின் வழங்க ஊட்டி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வாளையார் மனோஜிற்கு 4 தினங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியும் வரும் 7ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். வாளையார் மனோஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நாளை காலை ஜாமினில் வர உள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...