திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமுமுகவின் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பையும் மீறி 300க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் இறங்கி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் தமுமுகவை சேர்ந்த ஷேக் பரீத் என்பவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி ரயில் நிலைய வளாகத்தில் தமுமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், ஷேக் பரீத்தை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதாகினர். இந்த போராட்டத்தால் திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.