குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ‘மிஸ்டு கால்’ - பா.ஜ.க அறிமுகம்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பா.ஜ.க இன்று அறிமுகம் செய்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இதனை அறிமுகப்படுத்தி வைத்தார்.


குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பா.ஜ.க இன்று அறிமுகம் செய்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இதனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்கள், 8866288662 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்‘ கொடுத்து தங்கள் ஆதரவை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுபோல், குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மைத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று விளக்கமளிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நாடு முழுவதும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள். டெல்லியில் 5-ம் தேதி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வீடு வீடாக செல்ல உள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...