கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை செல்வபுரம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை செல்வபுரம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 425 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 53 போக்சோ வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது. அதேபோல 2019ம் ஆண்டு 61 போக்சே வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போக்சோ நீதிமன்றங்களும் உருவாகியுள்ளது.

அதேசமயம், சட்டங்களும் காவல்துறையின் கெடுபிடிகளும் அதிகரித்தாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடின்றி தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவை செல்வபுரம் அருகே 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்த கண்ணனின் மகன் ராம்குமார் (25). இவர் அண்ணாசிலை அருகே உள்ள நிறுவனத்தில் கிரெடிட் கார்ட் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் செல்வ புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி வீட்டிற்குள் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி, பெற்றோர்கள் வீட்டிற்கு வந்த பின் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ராம்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...