குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தும் எதிர்ப்பவர்களை கண்டித்தும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவந்த மத்திய அரசை வரவேற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் கோஷங்கள் எழுப்பினர்.


கோவை: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவந்த மத்திய அரசை வரவேற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் கோஷங்கள் எழுப்பினர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள், இயக்கங்கள் மற்றும் இதர கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.



அதே சமயம், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களின் நலனுக்கான சட்டம் இந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆதரவுக் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் மத்திய அரசை வரவேற்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.



மேலும், மத்திய அரசின் இந்த சட்டங்களை சில அமைப்பினர் வேண்டும் என்றே தவறாக பரப்புரை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 



இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவினர் இந்தச் சட்டத்தை ஆதரித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...