கோவை: கோவையில் பல்வேறு ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனிதச் சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் ,இயக்கங்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டவுன்ஹால் பகுதிகளில் தொழுகைக்குப்பின் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள CAA, NRC, NPR. போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கி அதை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் திராவிட கட்சி வழியில் வந்த அதிமுக மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மரக்கடை நவாப் ஹக்கீம் சாலையில் பல்வேறு ஜமாத்தினர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மரக்கடையில் தொடங்கி வெரைட்டி ஹால் சாலை வரைக்கும் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.

இந்த போராட்டத்தில் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பிடித்தும் மற்றும் கைகளில் தேசிய கொடியை ஏந்தியும் தங்களின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்துள்ளனர்.