குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியுரிமை திருத்த சட்டம் - 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: குடியுரிமை திருத்த சட்டம் - 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள், இயக்கங்கள் பல்வேறு கட்சியினர், இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின்(JAAC) பொதுக்குழுவில் இன்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் , மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு, மதச்சார்பின்மை என்பது நம் நாட்டின் உறுப்பு எனவும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசின் சட்டங்களை அனுமதியோம் என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைவர் நந்தகுமார் கூறும்போது ;-

இந்த குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சானத்திற்கு விரோதமானது. நான் இந்திய குடிமகன் என்பதை நானே ஆதாரங்களை கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஆபத்தானது. இந்த சட்டத்தால் ஏழை எளிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். ஆகவே, மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...