திருப்பூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி, 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 265 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகள், 2295 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 மையங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி, 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 265 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகள், 2295 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 மையங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வைத்தார்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

திருப்பூர் ஒன்றியம்;

திருப்பூர் ஒன்றியத்தில் 1 மாவட்ட கவுன்சிலர், 8 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 13 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 104 கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று விடிய விடிய நடைபெற்றது. அதில் கிராம பஞ்சாயத்து தலைவராக இடுவாய் - கணேசன், ஈட்டிவீரம்பாளையம் - ராதாமணி, கணக்கம்பாளையம் - சண்முகசுந்தரம், காளிபாளையம் - சுகன்யா, சொக்கனூர் - சகுந்தலா, தொரவலூர் - தேவகி, பட்டம்பாளையம் - சரவணன், பெருமாநல்லூர் - சாந்தாமணி, பொங்குபாளையம் - சுலோச்சனா, மங்கலம் - மருதாசலமூர்த்தி, முதலிபாளையம் - மயூரி பிரியா, மேற்குபதி - ரேஜீஸ், வள்ளிபுரம் - முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருப்பூர் ஒன்றிய 1வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சொர்ணாம்பாள், 2வது வார்டு கவுன்சிலராக சுயேட்சை தேவிஸ்ரீ, 3வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த ரத்தினாம்பாளும், 4வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சங்கீதாவும், 5வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த ஐஸ்வர்யா மஹராஜும், 6வது வார்டு கவுன்சிலராக சுயேட்சை ஜானகியும், 7வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியும், 8வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த கல்பனாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலராக அதிமுகவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வெற்றி பெற்றுள்ளார்.

ஊத்துக்குளி ஒன்றியம்;

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட 37 ஊராட்சிக்கான மாவட்ட கவுன்சிலர் 2, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 12, ஊராட்சி தலைவர் 37, ஊராட்சி கவுன்சிலர் 261 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஊத்துக்குளி 1ல் வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த மரகதமணியும், 2வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சம்பத்குமாரும், 3வது வார்டு கவுன்சிலராக கல்பனாவும், 4வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த யமுனாதேவியும், 5வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த மோகன சுந்தரியும், 6வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சிவமதியும், 7வது வார்டு கவுன்சிலராக திமுகவை சேர்ந்த பிரேமாவும், 8வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சிவக்குமாரும், 9வது வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த மோகனும் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சை மூர்த்தியும், 11வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த கலைவாணியும் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சை நடராஜும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊத்துக்குளி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு அதிமுகவை சேர்ந்த கண்ணம்மாள் மற்றும் சக்திவேல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்

மொத்த இடங்கள் - 170

அறிவிக்கப்பட்டவை - 170

திருப்பூர் மொத்தம் - 08

அதிமுக - 04

திமுக - 02

சுயேட்சை - 1

காங்கிரஸ் - 1

அவினாசி மொத்தம் - 19

அதிமுக - 08

திமுக - 02

தேமுதிக - 01

பாஜக - 01

சுயேட்சை - 05

மதிமுக - 01

சிபிஎம் - 01

தாராபுரம் மொத்தம் - 12

அதிமுக - 03

திமுக - 07

காங்கிரஸ் - 01

சுயேட்சை - 01

குடிமங்கலம் மொத்தம் - 13

அதிமுக - 07

திமுக - 06

காங்கேயம் மொத்தம் - 11

அதிமுக - 05

திமுக - 03

காங்கிரஸ் - 01

சுயேட்சை - 02

குண்டடம் மொத்தம் - 15

அதிமுக - 05

திமுக - 05

காங்கிரஸ் - 02

பாஜக - 01

மதிமுக - 01

சுயேட்சை - 01

மடத்துக்குளம் மொத்தம் - 09

அதிமுக - 01

திமுக - 06

காங்கிரஸ் - 01

தேமுதிக - 01

மூலனூர் மொத்தம் - 10

அதிமுக - 01

திமுக - 08

சுயேட்சை - 01

பல்லடம் மொத்தம் - 13

அதிமுக - 05

திமுக - 05

காங்கிரஸ் - 02

சுயேட்சை - 01

பொங்கலூர் மொத்தம் - 13

அதிமுக - 02

திமுக - 08

காங்கரஸ் - 01

தேமுதிக - 01

சிபிஐ - 01

உடுமலைப்பேட்டை மொத்தம் - 26

அதிமுக - 07

திமுக - 15

பாஜக - 01

சிபிஐ - 01

சுயேட்சை - 02

ஊத்துக்குளி மொத்தம் - 12

அதிமுக - 05

திமுக - 04

சுயேட்சை - 03

வெள்ளகோவில் மொத்தம் - 09

அதிமுக - 05

திமுக - 04

மா.ஊ.கவு விபரம் மொத்தம் : 17

அறிவிக்கப்பட்டவை : 17

அதிமுக : 13/17

திமுக : 03/10

காங்கிரஸ் : 01/4

சுயேட்சை : 0/17

மா.ஊ.ஒ.கவுன்சிலர் மொத்தம் : 170

அறிவிக்கப்பட்டவை : 170

அதிமுக : 57/147

திமுக : 75/143

காங்கிரஸ் : 9/12

தேமுதிக : 4/15

பாஜக : 3/16

சிபிஐ : 2/7

மதிமுக : 1

சிபிஎம் : 1/8

சுயேட்சை : 18/139

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...