கோவை: பொள்ளாச்சியில் கொடிக்கம்பம் நடும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்விரோதம் காரணமாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி மீது அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகி மற்றும் சிலர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை: பொள்ளாச்சியில் கொடிக்கம்பம் நடும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்விரோதம் காரணமாக இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி மீது அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகி மற்றும் சிலர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி மீது அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகி மற்றும் சிலர் முன்விரோதம் காரணமாக நடத்திய தாக்குதலில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது நவ்ஃபல்(33). இவர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் புறநகர் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு அதிமுகவின் கிளை அமைப்பான எம்ஜிஆர் பேரவையின் இளைஞரணி ஆனைமலை நகரச் செயலாளர் ரஹமத்துல்லா வீட்டின் புதுமனை புகுவிழாவிற்காக முகம்மது நவ்ஃபல் வீட்டருகே கொடிக்கம்பம் நடப்பட்டு வந்தது.
இதைக்கண்ட முகமது நவ்ஃபல்இ வீட்டின் நுழைவாயிலில் கம்பத்தை நட வேண்டாம் என்றும் வேறு பகுதியில் நடும்படி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூண்டது. அப்போது, ரஹ்மத்துல்லா மற்றும் அவருடன் இருந்த சிலர் முகமது நவ்ஃபல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் காயமடைந்த முகமது நவ்ஃபலுக்கு சிகிச்சை கொடுக்க வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முகமது நவ்ஃபல் மீது தாக்குதல் நடத்தும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக முகமது நவ்ஃபல் கூறும்போது :-
என்னை இவர்கள் எதார்த்தமாக தாக்கவில்லை வன்மத்துடன் தாக்கியுள்ளனர். ரஹமத்துல்லாவின் உறவினரின் மகன் பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நான் சாட்சியாக இருந்ததால் ஏற்கனவே பல முறை இடைஞ்சல்கள் கொடுத்துவிட்டனர். அதேபோல, தொழிலிலும் அரசியல் பலத்தை காண்பித்து தொல்லை கொடுத்தனர். இந்த நிலையில், தற்போது போக்சோ வழக்கின் வன்மத்தில் மீண்டும் என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரஹமத்துல்லா உட்பட 5க்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கியதாக அவர் தெரிவித்தார்.