கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல்

கோவை: கோவை ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கோவை: கோவை ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில்‌ உள்ளாட்சி தேர்தலில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு) பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில்‌ கடந்த டிசம்பர் 27ம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவும்‌, காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, சூலூர்‌, தொண்டாமுத்தூர்‌, சுல்தான் பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்‌ கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று இரண்டாம்‌ கட்ட வாக்குப்பதிவும்‌ நடைபெற்றது

இதில், கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2034 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 5 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 77.31 சதவீதம் வாக்கு பதிவும் இரண்டாம் கட்டமாக 7 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 75.69 சதவீதம் வாக்குகளும் பதிவானது.

இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 3753 அலுவலகர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்ட நிலையில் 315 மையங்களில் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 13

அதிமுக - 6

திமுக - 7

சுல்தான்பேட்டை ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 13

அதிமுக - 6

திமுக - 4

காங்கிரஸ் - 2

சுயேட்சை - 1

தொண்டாமுத்தூர் ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 9

அதிமுக - 6

திமுக - 3

கிணத்துக்கடவு ஒன்றியம் - ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்தம் - 17

அதிமுக - 9

திமுக - 5

மதிமுக - 1

தேமுதிக - 1

சுயேட்சை - 1

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஒன்றிய உறுப்பினர்களுக்கான முடிவுகள்.

1வது வார்டு உதயகுமாரி - அதிமுக 3033 வாக்குகள் பெற்று வெற்றி.

2வது வார்டு தனலட்சுமி - அதிமுக -2486 வாக்குகள் பெற்று வெற்றி.

3வது வார்டு மாசிலாமணி - திமுக -2308 வாக்குகள் பெற்று வெற்றி.

4வது வார்டு பிரகாஷ் - திமுக -1765 வாக்குகள் பெற்று வெற்றி.

5வது வார்டு ராமலிங்கம் - திமுக 2649 வாக்குகள் பெற்று வெற்றி.

6வது வார்டு பிரபாவதி - அதிமுக 2527 வாக்குகள் பெற்று வெற்றி.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...