கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சி ஆதிவாசி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயா என்ற பெண் வேட்பாளர் 59 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி அடிதடியில் ஈடுபட்டனர். இதில் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் ஜெயா உட்பட பலருக்கு பலத்த அடி விழுந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கூட்டத்தினரை கலைக்க முயன்றனர். எனினும் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். தடியடிக்கு பயந்து கூட்டத்தினர் சிதறி ஓடினர். அங்கிருந்த பெண் அலுவலர்கள், முகவர்கள் அறைகளுக்குள் ஓடி கதவை மூடிக் கொண்டனர். இந்த சம்பவத்தினால் வாக்கு எண்ணும் மையம் போர்க்களம் போல் காணப்பட்டது. எனினும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளரின் வெற்றி நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.