கோவை: மேட்டுப்பாளையத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் தாங்கள் தான் வெற்றி என மோதிக்கொண்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒன்றிய குழு உறுப்பினருக்கு 6வது வார்டில் அ.தி.மு.க சார்பில் ஜெகதீஷ் என்பவரும் தி.மு.க சார்பில் சாந்தாமணி என்பவரும் போட்டியிட்டனர்.
பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்த பகுதிக்கு நடைபெறும் இந்த ஒன்றிய குழும உறுப்பினருக்கு அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே நேரடி போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதலே இரு வேட்பாளர்களும் சமபலத்துடனும் பின்னர் முன்னும் பின்னும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அ.தி.மு.க 71 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த தி.மு.கவினர் தாங்கள் தான் வெற்றி பெற்றதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, மீண்டும் வாக்குகளை எண்ண உத்தரவிட தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தி.மு.க அணுகினர். ஆனால் அ.தி.மு.க வேட்பாளர் ஜெகதீசன் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.கவினர் அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தி.மு.க மாவட்ட செயலாளர் சி.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் தி.மு.கவினர் தேர்தல் நடத்தும் அதிகாரி இருந்த அறையை முற்றுகையிட்டதால் அங்கு கூடியிருந்த அ.தி.மு.கவினர் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்