கோவை: இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி நடைபெற்றது. வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தியதன் காரணத்தால் தமிழகம் முழுவதிலும் வேட்பாளர்கள் முன்னிலை விவரங்கள் அனைத்தும் தாமதமாக வெளியிடப்பட்டது.
கோவை: இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி நடைபெற்றது. வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தியதன் காரணத்தால் தமிழகம் முழுவதிலும் வேட்பாளர்கள் முன்னிலை விவரங்கள் அனைத்தும் தாமதமாக வெளியிடப்பட்டது.

இன்னிலையில் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரதீப் 9000 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் நரசிபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக மதுமதி விஜயகுமார், தேவராயபுரம் கார்த்திகா, தென்னமாநல்லூர் சித்ரா, இக்கரை போளுவாம்பட்டி செல்வராஜ், மத்வராயபுரம் மோகன்ராஜ் மற்றும் பேரூர் செட்டிபாளையம் கனகராஜ் என அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான 9 இடங்களில் 6 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தித்திபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் தண்டபாணி, பேரூர் செட்டிபாளையம் ஜெய்ஸ்ரீ செல்வகுமார் மற்றும் மாதம்பட்டி கவிதாபன்னீர் என திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தென்னம நல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆறுச்சாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 1408 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோல் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்பி (எ) சதானந்தம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 1156வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோல் மாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய உருப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கவிதாபன்னீர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 1330வாக்குக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தீத்திபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் புல்லட் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களை வரவேற்க்கும் விதமாகவும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் மேளதாளங்கள் இசைத்து வெற்றியை கொண்டாடினர்.
இதனையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களது கட்சியினருடன் தொண்டாமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும் தொண்டாமுத்தூர் பகுதியில் மக்களின் அடிப்படை தேவைகள், பிரச்சனைகள் மற்றும் விட்டுப்போயுள்ள அனைத்து நலதிட்டங்களையும் விரைவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியுடன் மக்களுக்கு சென்று செல்ல முயல்வோம் என தெரிவித்தனர்.
தங்களுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சருக்கும் வாக்களித்த வாக்காளர்கள் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் கூறும்போது, பணநாயகத்தை விடுத்து ஜனநயகம் வென்றுள்ளது என்பதற்கு திமுகவின் இந்த வெற்றியே இதற்கு சான்று என தெரிவித்தனர்.