மேட்டுப்பாளையம் உள்ளாட்சி தேர்தல்; ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட இரட்டை சகோதரர்கள் வெற்றி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளைபாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சென்னை பாளையத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுரேந்திரன் மற்றும் விக்ரம் ஆகிய 2 பேர் ஒரே ஊராட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்



கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ளாட்சி தேர்தலில் பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட இரட்டை சகோதரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளே பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சென்னம் பாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சுரேந்திரன் மற்றும் விக்ரம் ஆகிய 2 பேர் ஒரே ஊராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்

மேட்டுப்பாளையத்தில் கடந்த 30ம் தேதி இரண்டாம் கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் பள்ளேப்பாளையம் ஊராட்சியில் 4வது வார்டுக்கு போட்டியிட்ட சுரேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். அதே ஊராட்சியில் 10வது வார்டுக்கு போட்டியிட்ட அவரது சகோதரர் விக்ரம் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 11 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்ட மனோபலம் ஊராட்சியில் இந்த இரட்டை சகோதரர்கள் வெவ்வேறு பகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளராக களம் கண்ட போதும், தற்போது இருவரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணிக்காக ஊராட்சி மன்றம் செல்ல உள்ளனர். ஒரே குடும்பத்தில் பிறந்த இந்த இரட்டைச் சகோதரர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...