திருப்பூர்: பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியம் வெற்றி பெற்ற நிலையில், கொண்டாட்டத்தின் போது அவரது மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் பொங்கலூர் ஒன்றியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொல்லிக்காளிபாளையத்தில் திமுகவைச் சேர்ந்த சுப்ரமணியம் உகாயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5-வது வார்டு பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து உகாயனூரில் திமுகவினர் பல இடங்களில் வெற்றியைக் கொண்டாடினர். அப்போது, சுப்ரமணியத்தின் வெற்றியை அவரது மகன் கார்த்திக் (21) உள்ளிட்டோர் மத்தளம் அடித்து கொண்டாடினர். இந்நிலையில், பொதுவெளியில் மத்தளம் அடித்து வந்த கார்த்திக் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அவிநாசிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.