கோவை: ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும் நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு) பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த டிசம்பர் 27ம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவும், காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான் பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது
இதில், கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2034 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 5 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 77.31 சதவீதம் வாக்கு பதிவும் இரண்டாம் கட்டமாக 7 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 75.69 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 3753 அலுவலகர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்ட நிலையில் 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முகவர்களை தவிர அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆரம்பம் முதலே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் அதிமுக ஒரு இடத்திலும் மற்றும் திமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி அதிமுகவினர் 19 பேரும், திமுக 14 பேரும், தேமுதிக 1, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அதிமுகவை சேர்ந்த பிரதீப் 9650 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை முறையாக நடந்து வருவதாகவும் இதில் எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறினார்.