2020 புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைவு - மேற்கு மண்டல காவல்துறை தலைவர்‌

கோவை: கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர்‌ பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை: கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர்‌ பெரியய்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

காவல்துறை இயக்குநர், சென்னை அவர்களின்‌ உத்தரவின்‌ பேரிலும்‌, கூடுதல்‌ காவல்துறை இயக்குநரின்‌ அறிவுரையின்‌ பேரிலும்‌, காவல்துறை தலைவர்‌, மேற்கு மண்டலம்‌ அவர்களின்‌ மேற்பார்வையிலும்‌ ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மேற்கு மண்டலத்தில்‌ உள்ள 8 மாவட்டங்களில்‌ (கோவை- 10, ஈரோடு - 8. திருப்பூர்‌ - 10, நீலகிரி - 6, சேலம்‌ - 12, நாமக்கல்‌ - 10, தருமபுரி - 23 மற்றும்‌ கிருஷ்ணகிரி - 10) மொத்தம்‌ 89 முக்கிய இடங்களில்‌ Reception Point அமைத்து வாகன விபத்துக்களை குறைக்கும்‌ பொருட்டு இளைஞர்கள்‌ ஜாலி ரெய்டு, மது அருந்திவிட்டு வாகனம்‌ ஓட்டியவர்கள்‌, அதிவேகமாக வாகனம்‌ ஓட்டியவர்கள்‌, உயிருக்கு ஆபத்து ஏற்படும்‌ வகையில்‌ வாகனம்‌ ஓட்டியவர்கள்‌ மற்றும்‌ வாகன விதிகளை மீறியவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, சாலை விழிப்புணாவு எடுத்துரைத்ததன்‌ விளைவாகவும்‌, பொதுமக்கள்‌ அதற்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாலும்‌, பின்னர்‌ புத்தாண்டு வாழ்த்துக்கள்‌ தெரிவித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதன்‌ விளைவாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட வாகன விபத்துகள் குறைந்துள்ளது.

2019- இல்‌ புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள்‌ மற்றும்‌ புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற சாலை விபத்துகளில்‌ 6 ஆக இருந்த வாகன விபத்து இறப்பு வழக்குகள்‌ 2020ஆம் ஆண்டு 2 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 66.67 % (4 இறப்பு வழக்குகள்‌) குறைவாகும்‌.

2019 -இல்‌ புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள்‌ மற்றும்‌ புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற சாலை விபத்துகளில்‌ 33 ஆக இருந்த மொத்த வாகன விபத்து வழக்குகள்‌ 2020 -இல்‌ 7 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 78.79% (26 மொத்த வாகன விபத்து வழக்குகள்‌) குறைவாகும்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...