கோவை: கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் 3 வயது சிறுமியின் கால்களை உடைத்து கொடூரமாக கொலை செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை தீவிர தேடுதலுக்கு பின் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் மற்றும் ரூபினி தம்பதிகளின் மகள் தேவி ஸ்ரீ(3). இந்த சிறுமி கடந்த மே மாதம் 27ம் தேதி சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களுடனும் சிறுமியின் வலது கால் உடைக்கப்பட்ட நிலையிலும், கைக்குட்டை துணி ஒன்று சிறுமியின் தொண்டைக்குழி பகுதி வரைக்கும் திணிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இதையடுத்து சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றிய சரவணம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ் என்ற சற்குணம் என்பவருடன் அவரது தாயார் கள்ளத்தொடர்பில் இருந்ததும் அதற்கு குழந்தை இடையூறாக இருந்ததும் இதனால் குழந்தையை கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் சிறுமியின் தாயாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் கள்ளக்காதலன் சற்குணத்தை மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் பாரதிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றவாளியை கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த மே மாதம் முதல் தொடர்ச்சியாக குற்றவாளி குறித்து விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலீசார் எட்டு மாதங்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த சற்குணத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை தொடர்பாக சம்பவ பகுதியான கரட்டுமேடு அருகே சற்குணத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடும் பொழுது அதே பகுதியில் உள்ள சுவரில் ஏறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளின் நோய் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சற்குணம் சுவரின் மேலே இருந்து கீழே விழுந்ததில் அவரின் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3 வயது சிறுமியை கள்ளக்காதல் விவகாரத்திற்காக காலை ஒடித்து கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கும் வலது கால் ஒடிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய தீவிரம் காட்டிய தனிப்படை குழுவினருக்கு மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.