மதுக்கரை ஒன்றியம்: வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்ட இருதரப்பு ஆதரவாளர்கள்

கோவை: மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் வாக்குகள் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.

கோவை: மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளின் வாக்குகள் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது.

இதில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவூத்தம்பதி ஊராட்சி தலைவர் பதவிக்கு கோமதி செந்தில் என்கிற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டார். இவரது வாக்குகள் எண்ணப்பட்டு காலை 12 மணி அளவில் வெற்றி பெற்றதாக சொல்லப்பட்டது,. ஆனால் மாலை 4 மணி நேரம் ஆகியும் சுமார் ஐந்து மணி நேரமாக இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து வேட்பாளர் கோமதி செந்தில் கூறுகையில், "நான் 900 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சசிகலா 890 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ஆனால் எனது வெற்றியை அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை," என்றார்.

இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே இருந்த கோமதி செந்தில் ஆதரவாளர்கள் அவரது வெற்றியை அறிவிக்க வேண்டும் என முற்றுகையிட்டனர். அதே சமயம் எதிர்தரப்பு ஆதரவாளர்களும் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என கோஷமிட்டு முற்றுகையிட்டனர். 



இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனால் மதுக்கரை வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...