வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் உலாவரும் காட்டுயானைகள்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் பட்டப்பகலில் உலா வரும் காட்டுயானைகள் கூட்டத்தை கண்டு ரசித்த ஏராளமான சுற்றுலா பயணிகள் காட்டுயானைகளை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் பட்டப்பகலில் உலா வரும் காட்டுயானைகள் கூட்டத்தை கண்டு ரசித்த ஏராளமான சுற்றுலா பயணிகள் காட்டுயானைகளை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.



வால்பாறை பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் மற்றும் காட்டு யானைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டுயானைகள் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளின் ஓரங்களில் ஓடும் சிறு நீரோடைகளில் வந்து தங்களது தாகம் தீர்த்து வருகின்றன.



இந்த நிலையில், வால்பாறை வெள்ளமலை பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உணவு தேடி காஞ்சமலை சின்கோனா சாலையை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் காட்டுயானைகளை கண்டு ரசித்ததுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் வாகனங்களுடன் நின்று அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...