கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் மற்றும் முன்னிலை நிலவரம்

கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.



தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. கோவையில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2034 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 77.31 சதவீதம் வாக்கு பதிவும் இரண்டாம் கட்டமாக 7 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 75.69 சதவீதம் வாக்குகளும் பதிவானது. கோவை மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களில் 3753 அலுவலகர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 12 ஊரக உள்ளாட்சிக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.



அதன்படி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஒன்றாவது வார்டு பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அன்னூர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளருமான அம்பாள் பழனிச்சாமி 905 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடந்துறை ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த ராஜன் என்கிற தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார். கடந்த நான்கு முறை தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சண்முகம் 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.



கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் டி.சி.பிரதீப் முன்னிலை வகிக்கிறார். ஒன்றிய கவுன்சிலருக்கான 9 இடங்களில் நரசிபுரம், தேவராயபுரம், தென்னம்மநல்லூர் ஆகிய 3 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...