மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்; வாக்கு எண்ணிக்கை துவங்கியது

கோவை: கோவை மாவட்டத்தில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு கடந்த 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணி மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு கடந்த 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணி மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.



மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் மலுமிச்சம்பட்டி , பாலத்துறை, அரிசிபாளையம், சீரபாளையம், பிச்சனூர், மயிலேரிபாளையம், நாச்சிப்பாளையம், வழுக்குபாறை மாவுத்தம்பதி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் உள்ளன.

இதில் மாவட்ட கவுன்சிலர் 1, ஒன்றிய கவுன்சிலர்- 6, பஞ்சாயத்து தலைவர் - 9, ஊராட்சி வார்டு உறுப்பினர் - 84 என மொத்தம் 100 பதவிகளுக்கு 247 பேர் போட்டியிட்டுள்ளனர். 

74 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில் 200 வாக்குப்பெட்டிகள் மதுக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் பலத்த போலீஸ் பாதுக்காப்போதுடன் வைக்கப்பட்டன.

இன்று காலை 7.30 மணியளவில் பாதுகாக்கப்பட்ட வாக்குபெட்டி அறையின் சீல் மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி முன்னிலையில் அகற்றப்பட்டது.

முதல் கட்டமாக மாவூத்தம்பதி, ஊராட்சியில் பதிவானது வாக்கு பெட்டிகளில் 18 பெட்டிகள் சீல் காலை 8 மணிக்கு உடைக்கப்பட்டது.பெட்டி திறக்கப்பட்டு முகவர்களுக்கு காட்டப்பட்டது.

அதன் பின் நான்கு வண்ணச்சீட்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. தபால் வாக்குகள் எண்னும் பணி துவங்கியது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...