சென்னை: பிரதமர் மோடியை மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை அவதூறாகப் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் பாஜகவினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக நெல்லை கண்ணன் மீது பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது குற்றம் செய்ய தூண்டுதல், இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசுதல் என இந்திய தண்டனை சட்டம் 504,505,505(2) என மூன்று பிரிவின் கீழ் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லை கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டரில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு நாளை(01.01.2020) தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் தன்னுடன் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் இல கணேசன் உள்ளிட்டோரும் தர்ணாவில் பங்கேற்பார்கள் என்றும் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் பா.ஜ.க.வினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.