ஆங்கிலப் புத்தாண்டு சிறக்க பிரார்த்தனை - வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

கோவை: ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

கோவை: ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ஐ வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோவையில் பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் விதமாக காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பொதுமக்கள் காவல் துறையினருடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். 

இதேபோல் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டி கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதனால் வழிபாட்டு தலங்களில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 

புதிய வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம், ஆண்டு முழுவதும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என இறைவனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

ஆசியாவின் மிக பெரிய விநாயகர் கோவிலான புலியகுளத்தில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டு, புத்தாண்டு சிறக்க பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...