கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (31.12.2019) மாவட்ட தேர்தல் அலுவலர்,/மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இதைப்பதிவாளர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துக்கருப்பன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது :-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 27.12.2019 வெள்ளிக்கிழமை மற்றும் 30.12.2019 திங்கட்கிழமை என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 27.12.2019 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவும், காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 30.12.2019 அன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவும் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டம், முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது 77.31சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது 75.69 சதவீதம் வாக்குகளும் பதிவிருந்தன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 2034 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 2434 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சர்க்கார்சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சர்க்கார்சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு கே.ஜி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு டி.இ.எல்.சி. எஸ்.ஆர். பிரகாந்தல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு பி.ஏ. பொறியியல் கல்லூரியிலும், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்கு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வாக்கு எண்ணும் மையங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மின்தடை ஏற்படும் பட்சத்தில் மாற்று ஏற்பாடாக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதிகள், வாக்கு எண்ணும் அலுவலருக்கான பணியாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட வேண்டும், வாக்கு எண்ணும் மையத்தில் அவ்வப்போது அறிவிப்பு செய்ய போதுமான ஒலிபெருக்கி வசதிகள் செய்யப்பட வேண்டும், வாக்கு எண்ணும் மையங்களில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும், மேலும் மருத்துவ முகாம் அமைக்கபடவேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அவ்வப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களில் 4 கணினி இயக்குபவர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12 மையங்களிலும் 3753 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் தவிர அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உரிய முறையில் மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்,/மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.