வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ வீண் விவாதத்தில் ஈடுபடும் முகவர்கள்‌ உடனடியாக வெளியேற்றப்படுவர் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: வாக்கு எண்ணும்‌ வளாகத்திற்குள்‌ சிசிடிவி கேமராக்கள்‌ மூலம்‌ முகவர்களின்‌ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்‌ என்றும் வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ வீண் விவாதத்தில் ஈடுபடும் முகவர்கள்‌ உடனடியாக வாக்கு எண்ணும்‌ மையத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: வாக்கு எண்ணும்‌ வளாகத்திற்குள்‌ சிசிடிவி கேமராக்கள்‌ மூலம்‌ முகவர்களின்‌ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்‌ என்றும் வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ வீண் விவாதத்தில் ஈடுபடும் முகவர்கள்‌ உடனடியாக வாக்கு எண்ணும்‌ மையத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, 35 கிராம ஊராட்சித்‌ தலைவர்‌, 59 உளராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌ மற்றும்‌ 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பணியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 



மேற்கண்ட தேர்தலுக்கான வாக்குகள்‌ வரும் 02.01.2020 அன்று உதகையில்‌ அரசு பாலிடெக்னிக்‌ கல்லூரியிலும்‌, குன்னூரில்‌ புனித அந்தோணியார்‌ பள்ளியிலும்‌, கோத்தகிரியில்‌ அரசு உயர்நிலைப்பள்ளியிலும்‌ மற்றும்‌ கூடலூர்‌ புனித தாமஸ்‌ மேல்நிலைப்பள்ளியிலும்‌ எண்ணப்பட்டு தேர்தல்‌ முடிவுகள்‌ அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

வாக்கு எண்ணும்‌ மையங்களில்‌ வேட்பாளரால்‌ நியமிக்கப்பட்ட முகவர்கள்‌ காலை 6 மணி முதல்‌ உரிய அடையாள அட்டையுடன்‌ வருகை தா வேண்டும்‌. வாக்கு எண்ணும்‌ மையத்திற்கு வருகை புரியும்‌ முகவர்கள்‌ அலைபேசி, தீப்பெட்டி, கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்கள்‌, குடிநீர்‌ பாட்டில்கள்‌, மை பாட்டில்கள்‌ (Ink bottle), மையால்‌ நிரப்பப்பட்ட பேனாக்கள்‌ (Ink Pen), பீடி, சிகரெட்‌ மற்றும்‌ மதுபான வகைகள்‌ ஆகியவை வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ கொண்டுவர முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருட்களை கொண்டு வரும்‌ முகவர்களிடமிருந்து பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌.

மேலும்‌, முகவர்கள்‌ தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில்‌ மட்டுமே இருந்து வாக்கு எண்ணிக்கையினை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்‌. வாக்கு எண்ணும்‌ வளாகத்திற்குள்‌ CCTV கேமராக்கள்‌ மூலம்‌ முகவர்களின்‌ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்‌. வாக்கு எண்ணும்‌ மையத்திற்குள்‌ வீண் விவாதத்தில் ஈடுபடும் முகவர்கள்‌ உடனடியாக வாக்கு எண்ணும்‌ மையத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

எனவே, வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ முகவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறந்த முறையில் நடத்திட உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...