கோவையில் தடை செய்யப்பட்ட 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 1.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை மாநகர தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 1.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை மாநகர தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு பாலாஜி சரவணன் அவர்களின் மேற்பார்வையில் மாநகர் தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து புலியகுளம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, சண்முகா ஸ்டோர்ஸ் மற்றும் ஹரிஹரன் ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 130 கிலோ அளவில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 1.6 இலட்சம் ஆகும். மேலும் 2 உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வின் முடிவில் வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...